Published Date: July 31, 2023
CATEGORY: CONSTITUENCY
மதுரை மத்திய தொகுதிக்குட்பட்ட முடிவுற்ற திட்ட பணிகளை தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.
மாநகராட்சி வார்டு எண்.52-ல் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.6லட்சம் மதிப்பீட்டில் ரங்கசாமி சேர்வை சாலையில் பேவர் பிளாக் சாலையை திறந்து வைத்தார். தொடர்ந்து அமைச்சர் வார்டு எண் 60-ல் எல்லிஸ் நகர் காவல் நிலையம் அருகே சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ 10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
பின்னர் வார்டு எண் 77-ல் சுப்பிரமணியபுரம் மாநகராட்சி காலனியில் வசிக்கும் மக்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் அடுக்குமாடி குடியிருப்பு கட்டித்தரப்படவுள்ளது. இதற்கான பயனாளிகள் 80 பேருக்கு தற்காலிக நிவாரணமாக மாற்று இடத்தில் வசிக்க வாடகை உதவித்தொகை காண காசோலையினை அமைச்சர் வழங்கினார். இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட கலெக்டர் சங்கீதா, மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த், கமிஷனர் பிரவீன் குமார், மண்டல தலைவர் பாண்டிச் செல்வி, கவுன்சிலர் பாமா முருகன், பகுதி செயலாளர் பி.கே. செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Media: Dinakaran